விளம்பர படத்தில் ரூ.150 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபாஸ்


விளம்பர படத்தில் ரூ.150 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபாஸ்
x
தினத்தந்தி 24 Jun 2021 1:22 AM GMT (Updated: 2021-06-24T06:52:26+05:30)

விளம்பர படத்தில் ரூ.150 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த பிரபாஸ்.

பாகுபலி படத்தில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபாசுக்கு படங்கள் குவிகின்றன. சம்பளமும் உயர்ந்துள்ளது. தற்போது ராதேஷியாம், சலார் ஆகிய படங்களில் நடிக்கிறார். ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் விளம்பர படமொன்றில் அதிக சம்பளத்துக்கு நடிக்க வந்த வாய்ப்பை பிரபாஸ் உதறி உள்ளார். பிரபல மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் பிரபாசை அணுகி ஒரு வருடத்துக்கு தங்கள் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்து விளம்பர படங்களில் நடிக்க வேண்டும் என்றும், இதற்காக ரூ.150 கோடி சம்பளம் தருவதாகவும் பேரம் பேசியது. ஆனால் அதை ஏற்க பிரபாஸ் மறுத்துவிட்டார்.

முந்தைய விளம்பர படங்களில் நடிக்க பிரபாசுக்கு ரூ.18 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் விளம்பரங்களில் நடிப்பதில் அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story