‘பகையே காத்திரு’ படத்தில் ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு


‘பகையே காத்திரு’ படத்தில் ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு
x
தினத்தந்தி 25 Jun 2021 12:57 AM GMT (Updated: 2021-06-25T06:27:13+05:30)

‘பகையே காத்திரு’ படத்தில் ‘சஸ்பென்ஸ்’ கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு.

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் பேரன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை அவர் 18 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 18-வது படம், ‘புலிக்குத்தி பாண்டி’. இதை யடுத்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘பகையே காத்திரு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இதில் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. அவர் இதுவரை நடித்திராத வேடம் ஏற்றுள்ளதாக டைரக்டர் ஏ.மணிவேல் கூறுகிறார். அவர் மேலும் சொல்கிறார்:

‘‘படத்தில் 3 வில்லன்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு வில்லன் சாய்குமார். இன்னொரு வில்லன், சூப்பர் சுப்பராயன்.’ மற்றொரு வில்லன் யார் என்பதை ரகசியமாக வைத்து இருக்கிறோம். விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். வரலட்சுமி, ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார்.

கொரோனா முதல் அலையின்போது இந்த படப் பிடிப்பு பாதிக்கப்பட்டது. படம் ஒரு வாரம் வளர்ந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இரண்டாம் அலை தீர்ந்த பின், வேலூர், ஐதராபாத், கொல்கத்தா மற்றும் கேரளாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.’’

Next Story