மீண்டும் வில்லியாக சிம்ரன்


மீண்டும் வில்லியாக சிம்ரன்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:19 AM GMT (Updated: 2021-06-26T06:49:12+05:30)

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

புதிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லி வேடங்களையும் ஏற்கிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜாவில் வில்லியாக வந்தார். பிரசாந்த் நடித்துவரும் அந்தகன் படத்தில் கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்யும் குரூர வில்லியாக நடித்து வருகிறார். இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக இது தயாராகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த நிலையில் சர்தார் படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்கவும் சிம்ரனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ராஷி கன்னா நாயகியாக வருகிறார். சர்தார் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சிம்ரனை படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

Next Story