சினிமா செய்திகள்

மோகன்லாலின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி + "||" + Fraud in the name of Mohanlal's Big Boss show

மோகன்லாலின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி

மோகன்லாலின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி
மோகன்லாலின் பிக்பாஸ் நிகழ்ச்சி பெயரில் மோசடி நடந்துள்ளதாக நிகழ்ச்சி குழுவினர் அறிவித்து உள்ளனர்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழிகளில் பிரபலமாகி உள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். மோகன்லால் வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசன் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் 95 நாட்களுக்கு பிறகு கொரோனா 2-வது அலை காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெறுபவரை தேர்வு செய்ய விரைவில் பொது ஓட்டெடுப்பு நடத்த இருக்கிறார்கள். இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் ரிதி மந்த்ரா, ரம்ஜான் முகமது, மனி குட்டண், டிம்பல் பால், சாய் விஷ்ணு, மார்கோஸ், கிடிலம் பெரோஷ் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் அடுத்து தொடங்க உள்ள பிக்பாஸ் 4-வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக மர்ம நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது மோசடியானது என்றும் உண்மை என்று நம்பி யாரும் தங்களுடைய விவரங்களை அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும் பிக்பாஸ் 4 சீசன் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்கள் தேர்வை இதுவரை நடத்தவில்லை என்றும் நிகழ்ச்சி குழுவினர் அறிவித்து உள்ளனர்.