சினிமா செய்திகள்

6 மொழிகளில் தயாராகும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் கதை + "||" + The story of the film ‘R R R’ which is being prepared in 6 languages

6 மொழிகளில் தயாராகும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் கதை

6 மொழிகளில் தயாராகும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் கதை
மகதீரா, நான் ஈ, பாகுபலி ஆகிய படங்களை இயக்கிய ராஜமவுலி அடுத்து ‘ஆர் ஆர் ஆர்’ என்ற பிரமாண்டமான படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் சுதந்திர போராட்டத்துக்காக போராடிய அல்லூரி சீதாராம ராஜுவாக ராம்சரண் நடிக்க, ஐதராபாத் நிஜாம்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த கொமராம் பீமாக ஜூனியர் என்.டி.ஆர். நடித்து இருக்கிறார். இந்த இரு பெரும் வீரர்களும் சந்தித்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனையே ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் மையக்கரு.

ராம்சரணின் காதலி சீதாவாக பிரபல இந்தி நடிகை ஆலியாபட் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, இந்தி நடிகர் அஜய்தேவ்கன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. படமாக்க வேண்டிய 2 பாடல் காட்சிகளில் ஒன்று இப்போது படமாகி வருகிறது.