சினிமா செய்திகள்

மீண்டும் நடிக்கும் சுவாதி + "||" + Swati to play again

மீண்டும் நடிக்கும் சுவாதி

மீண்டும் நடிக்கும் சுவாதி
தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி.
தமிழில் சசிகுமார் இயக்கத்தில் 2008-ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’ பாடலில் சுவாதியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். 2018-ல் கேரளாவைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். கணவருடன் இந்தோனேசியாவில் குடியேறினார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பிய சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்தநிலையில் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க சுவாதி ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. படப்பிடிப்பில் சுவாதி பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூட்டணி அமைக்கும் பிரபுதேவா - அரவிந்த் சாமி?
நடிகர்கள் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
2. மீண்டும் ஆங்கில பெயர்கள்
சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு மீண்டும் ஆங்கில பெயர்கள் வைக்கப்படுகின்றன.
3. "மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை" - நடிகர் ரஜினிகாந்த்
மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினாகாந்த் தெரிவித்துள்ளார்.