சினிமா செய்திகள்

முத்துராமன் பேரன் என்பது பெருமை கவுதம் கார்த்திக் உருக்கம் + "||" + Muthurama's grandson is the son of the proud Gautam Karthik

முத்துராமன் பேரன் என்பது பெருமை கவுதம் கார்த்திக் உருக்கம்

முத்துராமன் பேரன் என்பது பெருமை கவுதம் கார்த்திக் உருக்கம்
முத்துராமன் பேரன் என்பது பெருமை கவுதம் கார்த்திக் உருக்கம்.
தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70-களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்த முத்துராமன் 1981-ல் தனது 52-வது வயதில் ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டி சென்றபோது மயங்கி விழுந்து இறந்து போனார்.


முத்துராமன் மகனான கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது அவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கார்த்திக்கின் மகனும் முத்துராமனின் பேரனுமான கவுதம் கார்த்திக்கும் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம், ரங்கூன், இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் முத்துராமன் பிறந்த நாளையொட்டி கவுதம் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், “உங்களை நான் பார்த்தது இல்லை. ஆனால் உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப்பற்றி சொல்வதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அன்பு, கடின உழைப்பு, அதீத திறமை, அர்ப்பணிப்புடன் செயல்பட்ட உங்களுடைய பேரன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை - ஆரி உருக்கம்
தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் டைட்டிலை வழங்க கடந்த சீசனின் வெற்றியாளரை அழைக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
2. எனக்கு இன்னொரு வாழ்க்கை இருந்தால், அதிலும் நீங்கள்தான் - மகேஷ் பாபு உருக்கம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய அண்ணன் மறைவிற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
3. இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது - இளையராஜா உருக்கம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் காமகோடியன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
4. கனவில் கூட நினைக்கவில்லை... எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
5. சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார் - கமல் உருக்கம்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.