சினிமா செய்திகள்

சமந்தா படம் இந்தியில் ரீமேக் + "||" + Samantha movie remake in Hindi

சமந்தா படம் இந்தியில் ரீமேக்

சமந்தா படம் இந்தியில் ரீமேக்
சமந்தா படம் இந்தியில் ரீமேக்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தி மொழியில் ரீமேக் செய்கின்றனர். மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் ஆக உள்ளன. இந்த வரிசையில் சமந்தா நடித்துள்ள ‘யூ டர்ன்' படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் குவித்தது. படத்தில் சமந்தாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இந்தி ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான பேமிலி மேன்-2 வெப் தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனால் மேலும் புதிய வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். சாகுந்தலம் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'
வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.
2. இந்தி ராட்சசனில் அக்‌ஷய்குமார்
விஷ்ணு விஷால் நடித்து 2018-ல் திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
3. இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா?
4. விஜய்யின் 'மாஸ்டர்' இந்தியில் 'ரீமேக்'
விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் சாந்தனு, அர்ஜுன்தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
5. இந்தியில் சாய் பல்லவி
மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி 2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படங்களில் நடித்தார்.