சினிமா செய்திகள்

சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம் + "||" + Death of Superman Image Director

சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம்

சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம்
சூப்பர் மேன் பட டைரக்டர் மரணம்.
புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர். இவர் 1978-ல் வெளியான சூப்பர் மேன் படத்தை இயக்கி பிரபலமானார். சூப்பர் மேன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது.


தற்போதைய அனைத்து சூப்பர் மேன் படங்களுக்கும் இவை முன்னோடி படங்களாக கொண்டாடப்படுகின்றன. லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை உருவாக்கினார். த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. ரிச்சர்ட் டோனர் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
2. ‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்
‘‘வடிவேல் இடம் காலியாகவே உள்ளது’’ டைரக்டர் சுராஜ் சொல்கிறார்.
3. பிரபல பின்னணி பாடகி மரணம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
4. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.
5. கொரோனா மரணம்: நினைவு சின்னமாக வளரும் மரங்கள்
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் நினைவாக டெல்லிக்கு அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கிறார்கள்.