சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் மோதல் சிகரெட் பிடித்த கதாநாயகியும், அதை கண்டித்த டைரக்டரும்... + "||" + Clash at the shooting site Cigarette favorite heroine, And the director who condemned it

படப்பிடிப்பு தளத்தில் மோதல் சிகரெட் பிடித்த கதாநாயகியும், அதை கண்டித்த டைரக்டரும்...

படப்பிடிப்பு தளத்தில் மோதல் சிகரெட் பிடித்த கதாநாயகியும், அதை கண்டித்த டைரக்டரும்...
‘பேய காணோம்’ மீரா மிதூன் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் கவுசிக். முக்கிய வேடத்தில் தருண்கோபி நடிக்கிறார்.
‘‘அம்மாவை காணோம்... அப்பாவை காணோம்... தாத்தாவை காணோம்... பாட்டியை காணோம்... என்று புகார் செய்வதை பார்த்திருப்போம்... பேயை காணோம் என்று முதன் முதலாக ஒருவர் புகார் செய்கிறார். அது ஏன், எதற்காக? என்பதே ‘பேய காணோம்’ படத்தின் கதை’’ என்கிறார், படத்தின் டைரக்டர் அன்பரசன். இவர் மேலும் கூறும்போது...

‘‘இந்த படத்தில் மீரா மிதூன் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகன் கவுசிக். முக்கிய வேடத்தில் தருண்கோபி நடிக்கிறார். சுருளிவேல் தயாரிக்கிறார். படத்தில் 2 கற்பழிப்பு காட்சிகள் உள்ளன. நகைச்சுவை கலந்த பேய் படமாக தயாராகி வருகிறது’’ என்றார்.

அவரிடம், ‘‘உங்களுக்கும், மீரா மிதூனுக்கும் படப்பிடிப்பின்போது தகராறு நடந்ததாக சொல்கிறார்களே...?’’ என்று கேட்டோம்.

அதற்கு அவர், ‘‘மீரா மிதூனுக்கு புகை பழக்கம் இருக்கிறது. எனக்கு அதுபற்றி கவலை இல்லை. எந்த பழக்கமாக இருந்தாலும் அதை பொதுவழியில் செய்வது தப்புதானே... அவர் படப்பிடிப்பு தளத்தின் உள்ளேயே சிகரெட் பிடித்தார். ‘‘இப்படி செட்டுக்குள் சிகரெட் பிடிக்காதீர்கள். வெளியே கேரவன் நிற்கிறது. உள்ளே போய் புகையுங்கள்’’ என்றேன். இதுதான் நடந்தது’’ என்று விளக்கம் அளித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை