சினிமா செய்திகள்

ஆர்யாவின் கடின உழைப்புக்கு கை மேல் கிடைத்த பலன் + "||" + For Arya hard work The benefit of getting over the hand

ஆர்யாவின் கடின உழைப்புக்கு கை மேல் கிடைத்த பலன்

ஆர்யாவின் கடின உழைப்புக்கு கை மேல் கிடைத்த பலன்
ஒரு வருட காலமாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று, ஹாலிவுட் கதாநாயகன் போல் மாறினார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்து வந்த படத்துக்கு, ‘சார்பட்டா பரம்பரை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்து இருக்கிறார்.

இதற்காக அவர் ஒரு வருட காலமாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று, ஹாலிவுட் கதாநாயகன் போல் மாறினார். அவருடைய கடின உழைப்புக்கு கை மேல் பலன் கிடைத்து இருக்கிறது. படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு, கோலிவுட்டில் உருவாகி இருக்கிறது. இதுவரை ஆர்யா படங்கள் வியாபாரமாகியிராத அளவுக்கு மிகப்பெரிய தொகைக்கு ‘சார்பட்டா பரம்பரை’ வியாபாரம் ஆகியிருக்கிறது. இந்த படத்தில், கதாநாயகியாக துசாரா நடித்து இருக்கிறார். பசுபதி மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலமே சண்டை காட்சிகள்தான் என்பதால், தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவு சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்கள்.

‘‘வடசென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத குத்துச்சண்டையை மையமாக கொண்ட கதை இது. அதனால் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன’’ என்று டைரக்டர் பா.ரஞ்சித் கூறினார்.