சினிமா செய்திகள்

‘‘மம்முட்டியின் பாராட்டில் நெகிழ்ந்து போனேன்’’ - ஊர்வசி சொல்கிறார் + "||" + In praise of Mammootty I went limp Urvasi says

‘‘மம்முட்டியின் பாராட்டில் நெகிழ்ந்து போனேன்’’ - ஊர்வசி சொல்கிறார்

‘‘மம்முட்டியின் பாராட்டில் நெகிழ்ந்து போனேன்’’ - ஊர்வசி சொல்கிறார்
சமீபகால படங்களில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த தமிழ் படம், ‘மூக்குத்தி அம்மன்.’ குடும்பம் குடும்பமாக பார்த்து ஊர்வசியை பாராட்டி இருக்கிறார்கள்.
கே.பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர், ஊர்வசி. சமீபகால படங்களில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த தமிழ் படம், ‘மூக்குத்தி அம்மன்.’ குடும்பம் குடும்பமாக பார்த்து ஊர்வசியை பாராட்டி இருக்கிறார்கள். குறிப்பாக கேரளாவில் இருந்து மம்முட்டி, ‘‘மூக்குத்தி அம்மன் படத்தில் கலக்கிட்டீங்க...எங்க வீட்டில் எல்லோரும் ஜாலியாக சிரித்து பார்த்தோம்’’ என்று போனிலேயே பாராட்டி பேசியிருக்கிறார். ஊர்வசி நெகிழ்ந்து போனாராம்.

மம்முட்டியின் பாராட்டுக்கு அப்புறம் எனக்கு இன்னமும் பொறுப்பு கூடியிருக்கு. இன்னும் நன்றாக நடிக்கணும் என்ற உத்வேகம் வந்து இருக்கிறது. வீட்டில் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு சினிமாவில் நடிப்பது சிலருக்கு கஷ்டமாக இருக்கிறதாம். எனக்கு அப்படி ஒன்றும் கஷ்டம் தெரியவில்லை’’ என்கிறார், ஊர்வசி.

இவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகளும், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகனும் இருக்கிறார்கள். மகளுக்கு 20 வயது பூர்த்தியாகி, பெங்களூருவில் வேலை செய்கிறார். மகனுக்கு 7 வயது. இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.’’