விஜய் சேதுபதி படம் ரிலீசில் மாற்றம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பாகுமா?


விஜய் சேதுபதி படம் ரிலீசில் மாற்றம் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பாகுமா?
x
தினத்தந்தி 22 July 2021 5:43 AM GMT (Updated: 2021-07-22T11:13:12+05:30)

விஜய் சேதுபதி படம் ரிலீசில் முடிவையும் மாற்றி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைக்கு வர தயாராக இருந்த படங்களை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள்.

சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்தனர். தற்போது அந்த முடிவையும் மாற்றி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். பார்த்திபன், மஞ்சிமா மோகன், காயத்ரி, பகவதி பெருமாள், கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

Next Story