சினிமா செய்திகள்

‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா + "||" + Vanitha explains about ‘one to one’

‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா

‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா
‘ஒருவனுக்கு ஒருத்தி’ பற்றி விளக்கம் சொன்ன வனிதா.
நடிகை வனிதா விஜயகுமார் இதுவரை 3 திருமணங்கள் செய்து, 3 கணவர்களையும் பிரிந்து விட்டார். அவர் 4-வதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் அவரும், நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனும் மாலை அணிந்தபடி, மணக்கோலத்தில் நிற்பது போல் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் தகவல்கள் பரவின.


இதுபற்றி வனிதா விஜயகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

‘‘ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் பண்பாடு என்பதை நான் மறுக்கவில்லை. ஒருவரை திருமணம் செய்து அந்த திருமண பந்தம் தோல்வியில் முடியும்போது, அடுத்து இன்னொரு திருமணம் செய்து கொள்வதில் தப்பு இல்லை. ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இன்னொருவருடன் உறவு வைத்துக்கொள்வதுதான் தப்பு. இதுதான் ஒருவனுக்கு ஒருத்தியின் அர்த்தம்.

நான் 4 திருமணம் அல்ல... 40 திருமணம் கூட செய்து கொள்வேன். இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தக்கூடாது. நாம் வாகனங்களில் செல்லும்போது, ஒருவர் ‘லிப்ட்’ கேட்டால், கொடுக்கிறோம். வழியில் அவன் கத்தியைக் காட்டி மிரட்டினால், என்ன செய்வீர்கள்? அவரை இறக்கி விட்டுவிட்டு, நாம் பயணத்தை தொடர்வதில் தவறு இல்லை.

பவர் ஸ்டாருடன் நான் மணக்கோலத்தில் இருப்பது, ஒரு படத்தின் விளம்பரத்துக்காகத்தான். உண்மையான திருமணக்கோலம் அல்ல.’’

இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விவாகரத்து வதந்திக்கு சமந்தா விளக்கம்
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
2. விமர்சனத்துக்கு கனகா விளக்கம்
விமர்சனத்துக்கு கனகா விளக்கம்.
3. சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
4. தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து? அமைச்சர் விளக்கம்
நிபா வைரசால் தமிழகம்-கேரளா இடையே பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார்.
5. தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்
தமிழ்-திராவிடம் கருத்து கலகம் முற்றுப்பெறுவது எப்படி? கவிஞர் வைரமுத்து விளக்கம்.