சினிமா செய்திகள்

அதிக சம்பளம் கேட்கிறேனா? ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Am I asking for a higher salary? Aishwarya Rajesh

அதிக சம்பளம் கேட்கிறேனா? ஐஸ்வர்யா ராஜேஷ்

அதிக சம்பளம் கேட்கிறேனா? ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் பரவி வருகிறது.
இதற்கு விளக்கம் அளித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது, ‘’நான் ஏற்கனவே நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் சம்பளம் உயர்ந்துள்ளது. ஆனால் எனது முதல் நோக்கம் சம்பளம் இல்லை. நல்ல கதையாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக்கொள்வேன். ரசிகர்கள் எனது படங்களை குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் மட்டுமன்றி அனைத்து முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடித்துள்ள திட்டம் இரண்டு படம் ரிலீசாக உள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறேன். எனது படங்கள் தியேட்டரில் ரிலீசாக வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இப்போது அதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை'' என்றார்.