அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது?


அஜித்தின் வலிமை ரிலீஸ் எப்போது?
x
தினத்தந்தி 30 July 2021 6:10 AM GMT (Updated: 2021-07-30T11:40:43+05:30)

அஜித்குமார் நடிக்கும் வலிமை படம் ரிலீசாகும் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். இந்த படத்துக்கு வெளிநாட்டில் படமாக்க வேண்டிய ஒரு சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது.

அதை படமாக்க அடுத்த வாரம் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு சென்னை திரும்பி ரிலீஸ் தேதியை அறிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் திரைக்கு வருவதை படக்குழுவினர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். அஜித்குமாரின் வலிமை படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அண்ணாத்த, வலிமை ஆகிய 2 படங்களையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும்படி தியேட்டர் அதிபர்கள் தரப்பிலும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் வருடம் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. வலிமை படத்தில் நாயகியாக கியூமா குரோஷி நடிக்கிறார். வினோத் இயக்குகிறார்.

Next Story