தமிழ் பட உலகில் கதை திருட்டை தடுப்பது எப்படி? இளம் டைரக்டர்கள் யோசனை

தமிழ் பட உலகில் கதை திருட்டை தடுப்பது எப்படி? இளம் டைரக்டர்கள் யோசனை
x
தினத்தந்தி 31 July 2021 7:42 PM GMT (Updated: 31 July 2021 7:42 PM GMT)

முறையாக அனுமதி பெறாதது என் கற்பனையையும், உழைப்பையும் திருடுவது போல் உள்ளது. சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து, ‘தாதா 87’ படத்தை இயக்கியவர், விஜய் ஸ்ரீ. இவர், தமிழ் பட உலகில் கதை திருட்டு இருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:- ‘‘தற்போது நான், ‘பவுடர், ’ ‘பப்ஜி’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து வருகிறேன். யூ டியூப்பில் சாய்குமார் நடிப்பில், ‘ஒன் பை டூ’ என்ற பெயருள்ள படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். காரணம் அது, என் படத்தின் அப்பட்டமான காப்பி. அதனால் மன உளைச்சல் அடைந்தேன்.

முறையாக அனுமதி பெறாதது என் கற்பனையையும், உழைப்பையும் திருடுவது போல் உள்ளது. சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது.

சமீபகாலமாக இதுபோன்ற கதை திருட்டுகள், தமிழ் பட உலகில் தொடர்கின்றன. எனவே நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்’’ என்கிறார், டைரக்டர் விஜய் ஸ்ரீ.

‘‘இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் கதை திருடர்கள் பயப்படுவதில்லை. அவர்களுக்கு வலிக்கிற மாதிரி ஏதாவது செய்தால்தான் பயப்படுவார்கள்’’ என்று கூறுகிறார்கள், சில இளம் டைரக்டர்கள்.

Next Story