சினிமா செய்திகள்

‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படமாகிறது + "||" + In the name of the national leader Muthuramalinga Thevar Biography becomes film

‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படமாகிறது

‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படமாகிறது
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
 ‘ஊமை விழிகள்’ புகழ் ஆர்.அரவிந்தராஜ் திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:- ‘‘பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜெ.எம்.பசீர் நடிக்கிறார். அவருடன் பயணித்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர் - நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு மூவீஸ் சார்பில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு தொடங்கி, தேவர் வாழ்ந்த ஊரிலும், சுற்றுவட்டாரங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.