சினிமா செய்திகள்

இந்திரா காந்தியாக நடிக்கும் லாரா தத்தா + "||" + Laura Dutta as Indira Gandhi

இந்திரா காந்தியாக நடிக்கும் லாரா தத்தா

இந்திரா காந்தியாக நடிக்கும் லாரா தத்தா
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பெல்பாட்டம் என்ற இந்தி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் லாரா தத்தா நடித்துள்ளார்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் பெல்பாட்டம் என்ற இந்தி படம் தயாராகி உள்ளது. இதில் அக்‌ஷய்குமார், வாணி கபூர், கியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பயணிகளுடன் விமானத்தை கடத்திய கும்பலிடம் இருந்து மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் வருகிறார். ரஞ்சித் திவாரி இயக்கி உள்ளார். 

இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை லண்டனில் நடத்தி முடித்துள்ளனர். படத்தின் கதை 1984-ல் நடப்பது போன்று உள்ளது. அப்போது இந்திராகாந்தி பிரதமராக இருந்தார். எனவே படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் லாரா தத்தா நடித்துள்ளார். 

அவரது தோற்றம் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு இந்திராகாந்தி போலவே இருப்பதாக வலைத்தளத்தில் பலரும் லாரா தத்தாவை பாராட்டி வருகிறார்கள். லாரா தத்தா தமிழில் அரசாட்சி, டேவிட் படங்களில் நடித்துள்ளார். பெல்பாட்டம் படம் விரைவில் திரைக்கு வருகிறது.