சினிமா செய்திகள்

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை மீண்டும் படமாகிறது + "||" + Sexy actress Shakila's life is filmed again

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை மீண்டும் படமாகிறது

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை மீண்டும் படமாகிறது
கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை மீண்டும் படமாகிறது.
மலையாள திரையுலகை 1990-களில் கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவரது படங்கள் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளி ஆச்சரியப்படுத்தின. இதையடுத்து ஆபாச படங்களில் நடிப்பதாக ஷகிலா மீது குற்றம் சுமத்தி மலையாள பட உலகில் இருந்து வெளியேற்றி விட்டனர். 

ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். ஷகிலா வேடத்தில் ரிச்சா சதா நடித்து இருந்தார். படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து இருந்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. கற்பழிப்பு குற்றங்களுக்கு ஷகிலா படங்கள் காரணமாக உள்ளன என்று திரையுலகினரையும், பெண்கள் அமைப்பினரையும் அவர் தூண்டி விட்டு நடிக்க தடை விதிக்க வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன. 

இந்த நிலையில் மீண்டும் ஷகிலா வாழ்க்கையை இந்தி, தமிழில் படமாக்க உள்ளனர். இதில் ஷகிலா வேடத்தில் நடிக்க ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமான கியூமா குரோஷியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கியூமா குரோஷி தற்போது வலிமை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடிக்கிறார்.