சினிமா செய்திகள்

குழந்தைகளுக்காக ஒரு திரைப்படம் அருண் வைத்தியநாதன் + "||" + For children A movie Arun Vaithiyanathan

குழந்தைகளுக்காக ஒரு திரைப்படம் அருண் வைத்தியநாதன்

குழந்தைகளுக்காக ஒரு திரைப்படம் அருண் வைத்தியநாதன்
பிரசன்னா-சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன்.
தொடர்ந்து அர்ஜுனை வைத்து ‘நிபுணன்’, மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தார். ‘சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பையும் கவனித்தார். இதையடுத்து அவர் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படத்தை தயாரித்து டைரக்டு செய்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

‘‘குழந்தைகளுக்காக எடுக்கப்படும் படங்கள் மிக குறைவு. அப்படியே எடுத்திருந்தாலும், அதில் காதல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் திணிக்கப்பட்டு இருக்கும்.

அன்புக்கொரு பஞ்சமில்லை என்பதே படத்தின் கரு. இதற்குள் நிறைய புதுமுகங்களை புகுத்த இருக்கிறோம். 4 குழந்தைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.’’