மீண்டும் திகில் கதை வித்தியாசமான வேடத்தில் லாரன்ஸ்


மீண்டும் திகில் கதை வித்தியாசமான வேடத்தில் லாரன்ஸ்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:08 AM GMT (Updated: 2021-08-09T06:38:44+05:30)

மீண்டும் திகில் கதை வித்தியாசமான வேடத்தில் லாரன்ஸ்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நடித்த முனி, காஞ்சனா திகில் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. காஞ்சனா படம் இந்தியிலும் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி என்ற பெயரில் ரீமேக்காகி ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் மீண்டும் திகில் படமொன்றில் லாரன்ஸ் நடித்து தயாரிக்க உள்ளார். படத்துக்கு துர்கா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் வரும் லாரன்ஸ் தோற்றம் வெளியாகி உள்ளது. அதில் நீண்ட வெள்ளை தாடி, நெற்றியில் குங்குமம் என அகோரி வேடத்தில் இருக்கிறார். இந்த தோற்றம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். துர்கா படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. காஞ்சனா படம் போல் துர்கா படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2-ம் பாகத்திலும் நடிக்க உள்ளார். சந்திரமுகி 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Next Story