சினிமா செய்திகள்

வாழ்க்கையை படமாக்க விரும்பும் அக்‌ஷய்குமார் + "||" + Life Wanting to film Akshay Kumar

வாழ்க்கையை படமாக்க விரும்பும் அக்‌ஷய்குமார்

வாழ்க்கையை படமாக்க விரும்பும் அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார் ஏற்கனவே ரஸ்டம், பேட்மேன், கோல்ட், கேசரி, பிரித்விராஜ் உள்ளிட்ட வாழ்க்கை கதை படங்களில் நடித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகரானஅக்‌ஷய்குமார், தமிழில்ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும் பல கோடி ரூபாய் உதவி வழங்கி பாராட்டுகளும் பெற்றுள்ளார்.

அக்‌ஷய்குமார் ஏற்கனவே ரஸ்டம், பேட்மேன், கோல்ட், கேசரி, பிரித்விராஜ் உள்ளிட்ட வாழ்க்கை கதை படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கவும் அக்‌ஷய்குமார் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்றும், அதில் அக்‌ஷய்குமார் நடிக்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பங்களை பதிவு செய்து வந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள அக்‌ஷய்குமார், “எனது வாழ்க்கையை படமாக எடுக்க விரும்புகிறேன். அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் நீரஜ் சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருப்பார்'' என்று கூறியுள்ளார்.