2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு புதையலை தேடி...


2 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஒரு புதையலை தேடி...
x
தினத்தந்தி 20 Aug 2021 5:02 PM GMT (Updated: 2021-08-20T22:32:07+05:30)

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில், சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை’ படத்தின் டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘‘இது கதையல்ல... 2 ஆயிரம் வருட நம்பிக்கை’’ என்று டீசரில் இடம்பெற்றுள்ள வசனம், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

யு.பி.எஸ்.சி. பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு புதையலை தேடிவருகிறார். இந்த பயணத்தில் மிக சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வடிவு ஏன் புதையல் வேட்டையில் ஈடுபடுகிறார். அவருக்கும், புதையலுக்கும் என்ன தொடர்பு? என்பதே ‘கொற்றவை’ படத்தின் திரைக்கதை’’ என்று கூறுகிறார், டைரக்டர் சி.வி.குமார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை, என்னுள் நீண்ட காலமாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. ‘கொற்றவை’ 3 பாகங்களாக உருவாகியுள்ளது’’ என்றார்.

‘‘2 ஆயிரம் வருடங்களுக்கு முன் மறைக்கப்பட்ட புதையலை கண்டறிய கதாநாயகன் ராஜேஷ் கனகசபை எடுக்கும் சாகச முயற்சிகள், மெய்சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகியாக சந்தனா ராஜ் நடித்துள்ளார்’’ என்று வசனகர்த்தா தமிழ்மகன் கூறினார்.

Next Story