சினிமா செய்திகள்

`கழுகு' டைரக்டரின் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்ரியா + "||" + Sasikumar is paired with Haripriya in the director's new film 'Eagle'

`கழுகு' டைரக்டரின் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்ரியா

`கழுகு' டைரக்டரின் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்ரியா
`கழுகு' டைரக்டரின் புதிய படத்தில் சசிகுமார் ஜோடியாக ஹரிப்ரியா நடிக்கிறார்.
ஜாம்பவான், கந்தக்கோட்டை, வல்லக்கோட்டை, ராஜவம்சம், கோடியில் ஒருவன் ஆகிய படங்களை தயாரித்த டி.டி.ராஜா, அடுத்து ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை.

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹரிப்ரியா நடிக்கிறார். இவர் களுடன் விக்ராந்த், துளசி, மதுசூதனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘கழுகு’, ‘கழுகு 2’ படங்களை இயக்கிய சத்யசிவா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி, படம் வேகமாக வளர்ந்து வருகிறது.