சினிமா செய்திகள்

ஹாலிவுட்டில் திரையிடப்பட்ட ‘கயிறு’ + "||" + ‘Rope’ screened in Hollywood

ஹாலிவுட்டில் திரையிடப்பட்ட ‘கயிறு’

ஹாலிவுட்டில் திரையிடப்பட்ட ‘கயிறு’
ஹாலிவுட் ஸ்டூடியோவில் ‘கயிறு’ படம் திரையிடப்பட்டது.
உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு இதுவரை 37 சர்வதேச விருதுகளை வென்றுள்ள ‘கயிறு’ படத்தில் எஸ்.ஆர்.குணா, காவ்யா மாதவ் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். ஐ.கணேஷ் இயக்கத்தில், ஆர்.ஜமால் முகமது தயாரித்து இருந்தார்.

இந்த படம், அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்டாலோன் பிலிம் பெஸ்டிவல் மற்றும் அவார்ட்ஸ் என்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த நடிகருக்கான இறுதி சுற்றுக்கு முன்னேறியது. பின்னர் ஹாலிவுட் ஸ்டூடியோவில் திரையிடப்பட்டது.

‘‘ஒரு பூம் பூம் மாட்டுக்காரனின் யதார்த்தமான வாழ்க்கையை, அவனுடைய உணர்வுகளை, காதலை, பாசத்தை தமிழ் கலாசார பின்னணியில், மிக அழகாக பதிவு செய்த படம், அது. அமெரிக்க ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது’’ என்றார்கள் படக்குழுவினர்.