நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் ஹேஷ்டேக் 2-ம் இடத்திலும், 'அஜித்குமார்' என்ற ஹேஷ்டேக் 4-ம் இடத்திலும், 'தளபதி 65' ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளன
சென்னை,
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ந் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் அஜித்தின் ‘வலிமை’ படத்திற்காக பயன்படுத்தப்பட்ட #Valimai முதலிடத்தை பிடித்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் பட ஹேஷ்டேக்கான #master இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வலிமை ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். அதேபோல் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.