கமல் திரைக்கதையில் தேவர் மகன் 2-ம் பாகம்

கமல் திரைக்கதையில் தேவர் மகன் 2-ம் பாகம்
x
தினத்தந்தி 25 Aug 2021 6:59 PM GMT (Updated: 2021-08-26T00:29:35+05:30)

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படம் 1992-ல் திரைக்கு வந்தது. நாசர், ரேவதி, கவுதமி ஆகியோரும் நடித்து இருந்தனர். பரதன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

படத்தில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா, இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்பெற்று இருந்தன. தேவர் மகன் 2-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “மலையாள இயக்குனரும், எடிட்டருமான மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். அவருக்காக ஒரு திரைக்கதை எழுதி வருகிறேன்'' என்றார். அந்த திரைக்கதைதான் தேவர் மகன் 2-ம் பாகத்துக்கானது என்றும், இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம், இந்தியன் 2 படங்களை முடித்ததும் தேவர் மகன் 2-ம் பாகம் படத்தில் கமல் நடிக்க உள்ளார்.

Next Story