டி.வி. நடிகரை மணந்த ஜெயம் ரவி பட நடிகை


டி.வி. நடிகரை மணந்த ஜெயம் ரவி பட நடிகை
x
தினத்தந்தி 28 Aug 2021 9:34 AM GMT (Updated: 2021-08-28T15:04:39+05:30)

ஶ்ரீகாந்த் நடித்த ‘மனசெல்லாம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா. தொடர்ந்து ஶ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் வந்தார். இந்த நிலையில் ஸ்வந்தம் என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்தபோது உடன் நடித்த டோஷ் கிறிஸ்டி என்பவருடன் சந்திராவுக்கு காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து சந்திரா கூறும்போது, “எங்கள் குடும்பத்தினர் சம்மதத்தோடு புதிய பயணத்தை தொடங்குகிறோம். எங்கள் மகிழ்ச்சியில் நீங்களும் இணைய விரும்புகிறோம். எனது திருமணம் பற்றிய கேள்விகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கிறேன். எங்களை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். சந்திராவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story