மாதவனுக்கு வரும் வில்லன் வாய்ப்புகள்


மாதவனுக்கு வரும் வில்லன் வாய்ப்புகள்
x
தினத்தந்தி 30 Aug 2021 6:03 PM GMT (Updated: 2021-08-30T23:33:21+05:30)

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். பேட்ட, விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். தற்போது கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கார்த்திக், அர்ஜூன், அரவிந்தசாமி, அருண் விஜய் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

தற்போது மாதவனுக்கு வில்லன் வாய்ப்புகள் வருகின்றன. லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனி கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனிடம் பேசினர்.

தற்போது சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்திலும், வில்லனாக நடிக்க மாதவனை அணுகி உள்ளனர். ஏற்கனவே இந்த கதாபாத்திரத்துக்கு பிரபல மலையாள நடிகர் பிஜுமேனனை முடிவு செய்தனர். தற்போது அவருக்கு பதிலாக மாதவனிடம் பேசுகிறார்கள்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றிகரமாக ஓடிய லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக காட்பாதர் தயாராகிறது. இந்த படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். மாதவன் 2000-ல் அலைபாயுதே படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Next Story