‘அந்தகன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் யோகிபாபு


‘அந்தகன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் யோகிபாபு
x
தினத்தந்தி 4 Sep 2021 6:32 PM GMT (Updated: 2021-09-05T00:02:55+05:30)

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சென்னை,

இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படம் தமிழில், நடிகர் பிரசாந்த் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நடித்துள்ள நடிகர் யோகி பாபு தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் நடிகர் யோகி பாபு, இயக்குனர் தியாகராஜனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 

Next Story