ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த சிருஷ்டி டாங்கே


ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த சிருஷ்டி டாங்கே
x
தினத்தந்தி 5 Sep 2021 3:07 AM GMT (Updated: 2021-09-05T08:37:27+05:30)

ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த சிருஷ்டி டாங்கே.

‘வெத்து வேட்டு’ படத்தை இயக்கிய எஸ்.மணிபாரதி அடுத்து ஒரு சஸ்பென்ஸ் திகில் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் மணிபாரதி கூறியதாவது:-

‘‘இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஐ.டி.யில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். அவரும், நண்பர்களும் ஊட்டிக்கு உல்லாசப்பயணமாக செல்கிறார்கள். அப்போது ஒரு கொலை நடக்கிறது. அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் கதை.

எந்த ஒரு பிரச்சினையையும் குருட்டாம்போக்கில் அணுகினால், அது மேலும் அந்த பிரச்சினையை சிக்கலில் கொண்டு போய்விடும் என்பதை கதையின் கருவாக வைத்து, திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.

ஊட்டியை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். வி.விஜயகுமார் தயாரிக்கிறார்.

கதாநாயகி சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த ஆடையில், கடும் குளிரில் நடுங்கியபடி அவர் நடித்தார். குளிரும், மழையும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருந்தன. ஒவ்வொரு நாளும் 4 அல்லது 5 மணி நேரமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.’’

Next Story