ஹரிகுமார் படத்தின் பெயர் மாற்றப்பட்டது


ஹரிகுமார் படத்தின் பெயர் மாற்றப்பட்டது
x
தினத்தந்தி 11 Sep 2021 3:25 PM GMT (Updated: 2021-09-11T20:55:05+05:30)

ஹரிகுமார் படத்தின் பெயர் மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ‘மதுரை மணிக்குறவர்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

‘தூத்துக்குடி’ பட புகழ் ஹரிகுமார், ‘மதுரை மணிக்குறவன்’ என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். மதுரை மணிக்குறவர் அறக்கட்டளை நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் படத்தின் பெயர், ‘மதுரை மணிக்குறவர்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மாதவி லதா கதாநாயகியாக நடிக்க, கவுசல்யா, சுமன், ராதாரவி, சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, பெசன்ட்நகர் ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முத்துலிங்கம் பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்து இருக்கிறார். ஜி.காளையப்பன் வில்லனாக நடித்து, படத்தை தயாரித்துள்ளார்.

Next Story