சினிமா செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் ஆரி + "||" + Actor Ari in a weird look

வித்தியாசமான தோற்றத்தில் ஆரி

வித்தியாசமான தோற்றத்தில் ஆரி
தமிழில் ஆடும்கூத்து, ரெட்டைச்சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். தற்போது ஆரி பகவான் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை காளிங்கன் இயக்குகிறார். திகில் கதையம்சம் கொண்ட படமாக தயாராகிறது. இந்த படத்தில் ஆரியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் இதுவரை பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார்.

அவரது தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஆரி ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம் ஆகியோரும் உள்ளனர். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக வருகிறார்.