சினிமா செய்திகள்

தெலுங்கு கதாநாயகியுடன் விஜய்சேதுபதி நடிக்க மறுப்பு + "||" + Vijay Sethupathi refuses to act with Telugu heroine

தெலுங்கு கதாநாயகியுடன் விஜய்சேதுபதி நடிக்க மறுப்பு

தெலுங்கு கதாநாயகியுடன் விஜய்சேதுபதி நடிக்க மறுப்பு
தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒரு வராக விஜய்சேதுபதி இருந்து வருகிறார். ‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன்’ என்று அவர் தன்னை ஒரு வட்டத்துக்குள் நிறுத்திக்கொள்ளாமல், சில படங்களில் வில்லனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் வில்லனாக நடித்த தெலுங்கு படம், ‘உப்பென்னா.’ இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கு பட உலகுக்கு வில்லனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூரமான வில்லனாகவும் நடித்து மிரட்டியிருந்தார், விஜய்சேதுபதி. அவருடைய நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் வரவேற்றதுடன், பாராட்டியும் பேசினார்கள். இந்த நிலையில், விஜய்சேதுபதி தமிழில் நடிக்க இருந்த ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதை அறிந்த விஜய்சேதுபதி, ‘‘கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டாராம்.