சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக் + "||" + Vijay Sethupathi's 96 movie remake in Hindi

விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்

விஜய் சேதுபதியின் 96 படம் இந்தியில் ரீமேக்
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.
தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து 2018-ல் வெளியான படம் 96. இந்த படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது. பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. இதையடுத்து 96 படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய பட அதிபர்கள் ஆர்வம் காட்டினர்.


தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்தும், திரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்தனர். 96 படத்தில் நடித்த கவுரி கிஷனும் ஜானு படத்தில் வந்தார். இந்த படம் ஆந்திராவில் சுமாராகவே ஓடியது. கன்னட மொழியிலும் 96 படம் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.

தொடர்ந்து இந்தியிலும் 96 படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது இந்தி ரீமேக் உரிமையை அஜய் கபூர் வாங்கி உள்ளார். இந்தி 96 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியில் ரீமேக் ஆகும் பா.இரஞ்சித் படம்
தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம், விரைவில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2. இந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதியின் ‘96’
தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 96 திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. அஜித்தின் 2 படங்கள் தெலுங்கில் ‘ரீமேக்'
வெற்றி பெற்ற பிறமொழி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆர்வம் காட்டுகிறார்.
4. சமந்தா படம் இந்தியில் ரீமேக்
சமந்தா படம் இந்தியில் ரீமேக்.
5. இந்தி ராட்சசனில் அக்‌ஷய்குமார்
விஷ்ணு விஷால் நடித்து 2018-ல் திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.