சினிமா செய்திகள்

படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம் + "||" + Tamil title for films - Sivakarthikeyan's choice

படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்

படங்களுக்கு தமிழில் தலைப்பு - சிவகார்த்திகேயன் விருப்பம்
சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார்.
சினிமா படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்க நடிகர் சிவகார்த்திகேயன் வற்புறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “நான் நடித்துள்ள டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டர்களில் ரிலீசாக வேண்டும் என்பது தயாரிப்பாளர் எடுத்த முடிவு. தியேட்டரில் டாக்டர் படம் வெளியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையாகவும் இருக்கிறது.


எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள் என்று தயாரிப்பாளரிடம் கூறி இருந்தேன். தியேட்டர்களில் படங்களை பார்ப்பதுதான் கொண்டாட்டமாக இருக்கும். எனது டாக்டர் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகாமல் தியேட்டர்களில் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது தயாராகும் படங்களை வியாபாரம் செய்வது என்பது கஷ்டமாக உள்ளது. படம் திரைக்கு வந்தால்தான் திரையுலகை நம்பி இருப்பவர்களுக்கு வேலை நடக்கும்.

நாய்சேகர் தலைப்பு சர்ச்சையாகி உள்ளது. இந்த தலைப்பு குறித்து வடிவேலுவிடம் சதீஷ் பேசி இருக்கிறார். சதீஷ் கதாநாயகனாக நடிப்பதால் பெரிய தலைப்பு தேவைப்படுகிறது. ஆனால் வடிவேலுவுக்கு அது தேவை இல்லை. எந்த தலைப்பு வைத்தாலும் வடிவேலு படங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது நல்லது. நானும் எனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைக்கும்படியே சொல்லி வருகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. 'டான்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது
'டான்'படத்தின் 'ஜலபுல ஜங்கு' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
2. கி.வீரமணி வேகமாக குணமடைய வேண்டும் முத்தரசன் விருப்பம்
கி.வீரமணி வேகமாக குணமடைய வேண்டும் முத்தரசன் விருப்பம்.
3. நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்
சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
4. எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி
எந்த கதாநாயகியுடன் ஜோடி சேர ஆசை? சிவகார்த்திகேயன் பேட்டி.
5. வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்.

அதிகம் வாசிக்கப்பட்டவை