சினிமா செய்திகள்

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா + "||" + Aishwarya directing the film again

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா

மீண்டும் படம் இயக்கும் ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார்.
3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. வைராஜா வை படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் 2015-ல் வெளியானது. அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரம் வெளியாகவில்லை. இதில் தனுஷ் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் தனுசின் “கலாட்டா கல்யாணம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
2. தேசிய திரைப்பட விருது பெற்ற தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன்!
67ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், வெற்றி மாறன், பார்த்திபன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
3. சுருட்டு பிடிக்கும் காட்சி சர்ச்சையில் நடிகர் தனுஷ்
தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் ஓ.டி.டியில் வெளியானது.
4. சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
5. தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன்-2 படம் கைவிடப்பட்டதா?
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்து 2010-ல் திரைக்கு வந்த ஆயிரத்தில் ஒருவன் படம் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.