ராஷிகன்னாவின் எளிய வாழ்க்கை


ராஷிகன்னாவின் எளிய வாழ்க்கை
x
தினத்தந்தி 7 Oct 2021 5:20 PM GMT (Updated: 2021-10-07T22:50:03+05:30)

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷிகன்னா.

தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷிகன்னா. விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

ராஷிகன்னா நடித்துள்ள மாநாடு, அரண்மனை 3 படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. தற்போது கார்த்தியுடன் சர்தார், தனுசின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

எளிமையாக வாழ்வதே மகிழ்ச்சிக்கு வழி என்று ராஷிகன்னா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘நான் எளிய வாழ்க்கையை கடைப்பிடிக்கிறேன். ஒவ்வொரு நாளையும் கடவுளை வணங்கி தொடங்குகிறேன். தேநீர் அருந்துகிறேன். யோகா செய்கிறேன். நடனம் ஆடுகிறேன். நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை அடிக்கிறேன்.

தினமும் ஒரு சாதாரண பெண்ணைப் போலவே வாழ்க்கையை நகர்த்துகிறேன். நான் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை என்னை குழப்பம் இல்லாமலும், மகிழ்ச்சியாகவும் வைத்து இருக்கிறது. அதோடு இதயத்தை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது” என்றார்.

Next Story