சினிமா செய்திகள்

இந்தி பட உலகில் தயாரிப்பாளரான பிருதிவிராஜ் + "||" + Prithiviraj is a producer in the Hindi film

இந்தி பட உலகில் தயாரிப்பாளரான பிருதிவிராஜ்

இந்தி பட உலகில் தயாரிப்பாளரான பிருதிவிராஜ்
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்த பிருதிவிராஜ் மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
மோகன்லால் நடித்த லூசிபர் மலையாள படம் மூலம் பிருதிவிராஜ் இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது மேலும் 2 படங்களை இயக்கி வருகிறார். ஏழுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தும் வருகிறார்.

பிருதிவிராஜ் புரொடக்‌ஷன் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி மலையாளத்தில் சில படங்களை பிருதிவிராஜ் தயாரித்தும் இருக்கிறார். அவரது தயாரிப்பில் 2019-ல் வெளியான மலையாள படம் டிரைவிங் லைசென்ஸ் பெரிய வெற்றி பெற்றது. லால் ஜூனியர் இயக்கிய இந்த படத்தில் பிருதிவிராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

டிரைவிங் லைசென்ஸ் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இந்தி ரீமேக்கில் பிருதிவிராஜ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்க உள்ளார். இதன் மூலம் இந்தி பட உலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தி பட உலகில் முந்துகிறார் டாப்சி
இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேயை பின்னால் தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார்.