சினிமா செய்திகள்

மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா + "||" + Golden visa for Mira Jasmine

மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா

மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா
அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
கோல்டன் விசா இந்திய நடிகர்கள் பலருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர். சமீபத்தில் இந்தி நடிகை ஊர்வசி ரவுடாலாவுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மினும் தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இவர் தமிழில் மாதவனுடன் ரன் படத்தில் அறிமுகமானார்.

விஜய்யுடன் புதிய கீதை, அஜித்குமாருடன் ஆஞ்சநேயா, விஷாலின் சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து, திருமகன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.