சினிமா செய்திகள்

உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு + "||" + Rahul Preet Singh and Manjima Mohan console Samantha for being determined

உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு

உறுதியோடு இருங்கள் என சமந்தாவுக்கு ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு
சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு உறுதியோடு இருங்கள் என ரகுல் பிரீத் சிங், மஞ்சிமா மோகன் ஆதரவு அளித்து உள்ளனர்.
சென்னை,

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.  இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். 

இந்தநிலையில், சமூகவலைதள பக்கத்தில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் அளித்து, நெருக்கடியான காலத்தில், என் மீது இரக்கம் காட்டிய அனைவருக்கும் நன்றி. அதேவேளையில், நான் ஒருவருடன் தொடர்பில் இருந்தேன்; சந்தர்ப்பவாதி; குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை; கருக்கலைப்பு செய்தேன் என்று என்னைப் பற்றிய வதந்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

விவாகரத்து என்பதே மிகவும் வேதனையான ஒன்று. அதிலிருந்து மீண்டு வர வெகு நாட்களாகும். இது ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில், என் மீதான தாக்குதல்கள் இடைவிடாது தொடருகின்றன. இதை, ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றார்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு ரகுல் பிரீத் சிங் ஹார்ட் பதிவிட்டு உறுதியோடு இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சிமா மோகன் ‘உறுதியோடு இருங்கள் சமந்தா” என்று டுவிட் செய்துள்ளார்.

ஏற்கனவே, சமந்தா விவாகரத்து அறிவித்தபோது, கங்கனா ரனாவத் சமந்தாவுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விவாகரத்து பிரிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்- நடிகை சமந்தா உருக்கம்
நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.
2. கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்
கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
3. சமந்தா கணவரை பிரிய காரணம்...? நடிகை ஸ்ரீ ரெட்டியின் வில்லங்க விளக்கம்
சமந்தா, ப்ரீத்தம் ஜுகல்கருக்குமான நட்பு நிச்சயமாக பிரிவுக்கு காரணமாக இருக்க முடியாது என்று நடிகை ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.
4. விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
5. கணவரை சமந்தா பிரிய இதுதான் காரணமா?
நடிகை சமந்தா, காதல் திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிவதற்கான பல காரணங்கள் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.