சினிமா செய்திகள்

உருவ கேலியால் வருந்திய பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra regrets image mockery

உருவ கேலியால் வருந்திய பிரியங்கா சோப்ரா

உருவ கேலியால் வருந்திய பிரியங்கா சோப்ரா
இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்த பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். பிரியங்கா சோப்ரா இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘சினிமா துறையில் இருந்ததால் எனது உடல் தோற்றத்தை பலரும் கூர்ந்து கவனித்தனர். 20 வயதாகும்போது மற்ற இளம்பெண்களை போலவே அழகின் உண்மையற்ற தன்மைகளான போட்டோஷாப் செய்த முகம், அழகான தலைமுடி போன்றவற்றை நானும் விரும்பினேன். எனது இயற்கை நிறத்தை பல வருடங்களாக நான் பயன்படுத்தவே இல்லை. 

ஆனால் ஒரு கட்டத்தில் எனது உடலில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது 30 வயதை நெருங்கினேன். நீங்கள் பார்க்க வேறுமாதிரி இருக்கிறீர்கள். உங்களுக்கு வயது ஆகி விட்டது என்று சமூக வலைத்தளங்களில் என்னை உருவ கேலி செய்தனர். அது எனது மனதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இணையதளங்கள் மீது எனக்கு இருந்த பார்வை மாறியது. என்னை நானே பாதுகாத்தேன். நள்ளிரவு 1 மணிக்கு பீட்சா சாப்பிடுவதாக இருந்தாலும் எனது உடம்புக்கு எது தேவையோ அதை கொடுத்தேன்” என்றார்.