நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்


நான் ஒரு போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவன் : நடிகர் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 16 Oct 2021 11:47 AM GMT (Updated: 2021-10-16T17:17:36+05:30)

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

 சென்னை 
 
தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்  இவரது  நடிப்பில்  சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்   சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட சென்றிருந்தார்.

அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின்  நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது

 நான் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் . அதனால் காவலர் அருங்காட்சியத்தினை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றும்  போலீசாக  வேண்டும் என்ற லட்சியம் உடையவர்கள் அனைவரும் இந்த காவலர் அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டுமென்று நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு போலீஸ்  அதிகாரி  என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story