சினிமா செய்திகள்

‘ஜிம்’முக்கு போய் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்தார் சினேகா + "||" + Sneha went to the gym and lost weight through exercise

‘ஜிம்’முக்கு போய் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்தார் சினேகா

‘ஜிம்’முக்கு போய் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்தார் சினேகா
நடிகை சினேகா ‘ஜிம்’முக்கு போய் பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்தார்.
வசீகர சிரிப்பழகி சினேகா 2 குழந்தைகளுக்கு அம்மா ஆனபின், தாய்மைக்கே உரிய பூரிப்பில், செழிப்பான தோற்றத்துடன் காணப்பட்டார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்க விரும்பியதால், உடல் பருமனை குறைக்க முன்வந்தார். இதற்காக, ‘ஜிம்’முக்கு போய் கடுமையான பயிற்சிகள் செய்தார். இதன் மூலம் அவருடைய உடல் எடை 7 கிலோ குறைந்தது. மேலும் எடையை குறைப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது அவர் முன்பிருந்தது போல் சிரிப்பழகி சினேகாவாக தெரிகிறார்.

அவருடைய காதல் கணவர் பிரசன்னா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி படங்களில் நடித்து வருகிறார்.