சினிமா செய்திகள்

காஜல் அகர்வால் மகிழ்ச்சி + "||" + Kajal Agarwal marriage life is happy

காஜல் அகர்வால் மகிழ்ச்சி

காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி தற்போது ஒரு வருடம் முடிந்துள்ளது. 

இதையடுத்து கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு திருமண நாள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் உங்களை நேசிக்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு உள்ளார். 

காஜல் அகர்வாலுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அவர் உறுதிப்படுத்தவில்லை. தமிழில் 'பாரீஸ் பாரீஸ், ஹே சினாமிகா' படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘இந்தியன் 2' படம் கைவசம் உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்..!
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
2. காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.
3. திருமணமாகியும் படவாய்ப்புகள் காஜல் அகர்வால் மகிழ்ச்சி
காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை மணந்தார்.