சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடி?


சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடி?
x
தினத்தந்தி 6 Nov 2021 6:27 AM GMT (Updated: 6 Nov 2021 6:27 AM GMT)

சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம்.

சிவகார்த்திகேயனுக்கு ‘டாக்டர்’ படம் திருப்புமுனையாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர் அதிபர்களை ‘டாக்டர்’ குளிரவைத்து இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம். அவர் கேட்கிற சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள்.

Next Story