நடிகர் சூர்யா படத்தில் சர்ச்சை காட்சி நீக்கம்


நடிகர் சூர்யா படத்தில் சர்ச்சை காட்சி நீக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2021 9:36 AM GMT (Updated: 2021-11-08T15:06:40+05:30)

ஜெய்பீம் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தின.வில்லன் பின்னணியில் இருக்கும் காலண்டர் காட்சியை படக்குழுவினர் நீக்கி உள்ளனர்.

சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. தா.செ.ஞானவேல் இயக்கி உள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் பழங்குடி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. இதில் பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்துவிட்டு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலகினரும் படக்குழுவினரை பாராட்டி உள்ளனர்.

இந்த நிலையில் ஜெய்பீம் படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவற்றை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தின. இதையடுத்து எதிர்ப்புக்கு உள்ளான வில்லன் பின்னணியில் இருக்கும் காலண்டர் காட்சியை படக்குழுவினர் நீக்கி உள்ளனர். அதற்கு பதிலாக லட்சுமி படம் பொருந்திய காலண்டர் காட்சியை இடம்பெறச் செய்துள்ளனர்.


Next Story