சண்டை காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் நடிக்கும் அஜித்குமார்


சண்டை காட்சிகளில் ‘டூப்’ இல்லாமல் நடிக்கும் அஜித்குமார்
x
தினத்தந்தி 28 Nov 2021 6:49 AM GMT (Updated: 2021-11-28T12:19:55+05:30)

அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை அவர் பயன்படுத்துவதில்லை.

அஜித்குமார் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. அவரே நடிக்கிறார் என்பது பழைய தகவல்தான். அதை அவருடன் பணிபுரிந்த சக தொழில்நுட்ப கலைஞர் சொல்வது புதுசு. அந்த தொழில்நுட்ப கலைஞர் வேறு யாருமல்ல. அஜித்துடன் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் வெற்றிதான். இவர் அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அஜித்துடன் பணிபுரிந்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

‘‘விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு காலையில் தொடங்கி, விடிய விடிய நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் சிலரும் ஒரு ஓட்டலுக்குப்போய் பொங்கல் சாப்பிடுவோம். இதைக்கேள்விப்பட்ட அஜித், மறுநாள் எங்களுக்காக அதிகாலையில் பொங்கல் சமைத்து அவரே பரிமாறினார்.

சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை அவர் பயன்படுத்துவதில்லை. அவரே நடிப்பார். ‘‘எனக்கு நடப்பதுதானே ‘டூப்’ நடிகருக்கும் நடக்கும்...’’ என்று அவர் விளக்கமும் சொல்வார். எல்லோரும் நல்லாயிருக்கணும் என்று அஜித் விரும்புவார்’’ என்கிறார், ஒளிப்பதிவாளர் வெற்றி.

Next Story