பிரபல நடிகருக்கு கொரோனா


பிரபல நடிகருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Dec 2021 5:54 PM IST (Updated: 2 Dec 2021 5:54 PM IST)
t-max-icont-min-icon

பிரபல இந்தி நடிகர் சிலாஜித் மஜூம்தர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

பிரபல இந்தி நடிகர் சிலாஜித் மஜூம்தர். இவர் வங்காள மொழி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். பாடகராகவும் உள்ளார். சிலாஜித் மஜூம்தருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலும் இருந்தது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிலாஜித் தடுப்பூசி போட்டுக்கோண்டார். ஆனாலும் அவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சிலாஜித் மஜூம்தர் கூறும்போது, ‘‘நான் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். 

அதன் பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குழப்பமாக இருக்கிறது. தடுப்பூசி போட்டவர்கள் எல்லோரது மனநிலையும் என்னைப்போலவே உள்ளது. இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன்” என்றார்.

Next Story